மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் எம்.எஸ்.தோனி த அன் டோல்டு ஸ்டோரி
சுஷாந்த் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய எம்.எஸ்.தோனி த அன் டோல்டு ஸ்டோரி திரைப்படம் மீண்டும் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சுஷாந்த் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய எம்.எஸ்.தோனி த அன் டோல்டு ஸ்டோரி திரைப்படம் மீண்டும் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வருகிற மே 12 ஆம் தேதி திரையிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் தோனி எங்கு சென்றாலும் அவருக்கு கிடைக்கின்ற அமோக வரவேற்பை கருத்தில் கொண்டு எம்.எஸ்.தோனி த அன் டோல்டு ஸ்டோரி படத்தை மீண்டும் திரையிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.