செய்திகள்

ஐசிசி தரவரிசையில் பாகிஸ்தான் முதலிடம்! 

பாகிஸ்தான் அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. 

DIN

பாகிஸ்தான் அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. 

நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 டி20 போட்டிகளில் 2-2 என சமநிலையில் முடிவுற்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய போட்டிகளில் 4-0 என பாபர் ஆஸம் தலைமையில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த தொடர் வெற்றிகளின் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் 113 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 

கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றால் மீண்டும் மூன்றாவது இடத்திற்கே தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய நிலவரப்படி: 

  1. பாகிஸ்தான் - 113 புள்ளிகள் 
  2. ஆஸ்திரேலியா - 113 புள்ளிகள் 
  3. இந்தியா - 113 புள்ளிகள்  
     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT