செய்திகள்

தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளை தோனி: மு.க.ஸ்டாலின் புகழாரம் 

சிஎஸ்கே கேப்டன் தோனியை முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழ்ந்து பேசியுள்ளார். 

DIN

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் கோப்பைக்கான இலச்சினை மற்றும் இணையதளத்தை, அறக்கட்டளையின் தூதுவர் தோனி வெளியிட்டார்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, தங்கம் தென்னரசு, சிஎஸ்கே கேப்டன் தோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அறக்கட்டளையைத் தொடக்கிவைத்து உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு தனிப்பட்ட முறையில் ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்த முதல்வர் பேசியதாவது: 

தமிழ்நாடு தத்தெடுத்துக்கொண்ட மகன் தோனி. லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு தோனி முன்னுத்தாரணமாக விளங்குகிறார். சென்னையின் செல்லப்பிள்ளை எம்.எஸ்.தோனி தொடர்ந்து சிஏச்கே அணிக்காக விளையாட வேண்டும். கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் தமிழ்நாட்டிலிருந்து நிறைய தோனிக்களை உருவாக்க விரும்புகிறோம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT