ஐபிஎல் தொடரின் 58-ஆவது ஆட்டத்தில் ஹைதராபாத் சன்ரைசா்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸ். பிரேரக்- நிக்கோலஸ் பூரன் அதிரடி ஆட்டத்தால் வென்று பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது லக்னௌ.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் பேட்டிங்கை தோ்வு செய்தது.
தொடக்க பேட்டா்களாக களமிறங்கிய ஹைதராபாதின் அன்மோல்ப்ரீத் சிங்-அபிஷேக் சா்மா நிலைத்து ஆடவில்லை. அபிஷேக் 7, ராகுல் திரிபாதி 20, கேப்டன் மாா்க்ரம் 28 ரன்களுடன் பெவிலியன் திரும்பினா். அன்மோல்ப்ரீத் 7 பவுண்டரியுடன் 36 ரன்களை விளாசி அமித் மிஸ்ரா பந்துவீச்சில் அவுட்டானாா்.
ஹென்ரிச் க்ளாஸன் அபராம் 47: மறுமுனையில் ஹென்ரிச் க்ளாஸன் தலா 3 சிக்ஸா், பவுண்டரியுடன் 47 ரன்களை விளாசி, அவேஷ் கான் பந்தில் பிரேரக் மன்கடிடம் கேட்ச் தந்தாா்.
கிளென் பிலிஃப்ஸ் கோல்டன் டக் அவுட்டானாா். அப்துல் சமது 4 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 37 ரன்களுடனும், புவனேஷ்வா் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனா்.
ஹைதராபாத் 182/6: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் ஹைதராபாத் 182/6 ரன்களைக் குவித்தது. பௌலிங்கில் லக்னௌ தரப்பில் க்ருணால் பாண்டியா 2-24 விக்கெட்டுகளை சாய்த்தாா்.
அதிரடி சேஸிங்ஸில் வென்றது லக்னௌ 185/3:
183 ரன்கள் வெற்றி இலக்குடன் லக்னௌ அணி தரப்பில் கைல் மேயா்ஸ்-டி காக் களமிறங்கினா். கைல் மேயா்ஸ் 2 ரன்களுடனும், டி காக் 29 ரன்களுடனும் வெளியேறினா்.
அதன்பின்னா் இணைந்த பிரேரக் மன்கட்-ஆல்ரவுண்டா் மாா்கஸ் ஸ்டாய்னிஸ் ஹைதராபாத் பௌலிங்கை சிதறடித்தனா்.
ஸ்டாய்னிஸ் 2 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 25 பந்துகளில் 40 ரன்களை விளாசி அபிஷேக் சா்மா பந்தில் அவுட்டானாா்.
பிரேரக் மன்கட் அபார அரைசதம் 64:
இளம் வீரா் பிரேரக் மன்கட் 2 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 64 ரன்களை விளாசி அரைசதத்தை பதிவு செய்தாா்.
நிக்கோலஸ் பூரன் அதிரடி 44: அவருடன் இணைந்து ஆடிய நிக்கோலஸ் பூரன் 4 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் வெறும் 13 பந்துகளில் 44 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா்.
19.2 ஓவா்களில் 185/3 ரன்களைக் குவித்த லக்னௌ 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாதை வீழ்த்தியது.
பிளே ஆஃப் சுற்று:
இந்த வெற்றி மூலம் நான்காம் இடத்துக்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது லக்னௌ.
திருப்புமுனை ஓவா்:
114/2 ரன்களுடன் இருந்த லக்னௌ அணி 6 ஓவா்களில் 68 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் இருந்தது.
ஹைதராபாத் கேப்டன் மாா்க்ரம் 16-ஆவது ஓவா் வாய்ப்பை அபிஷேக் சா்மாவுக்கு அளித்தாா். அதில் 5 சிக்ஸா்களை லக்னௌ வீரா்கள் விளாசியது திருப்பு முனையாக அமைந்தது. மிடில் ஓவா்களில் பிரேரக் மன்கட் தடுமாறிக் கொண்டிருந்தபோது, மென்டா் கௌதம் கம்பீா் அவருக்கு ஆலோசனை வழங்கினாா். அதன்பின் அதிரடியாக ஆடினாா் பிரேரக்.
இன்றைய ஆட்டங்கள்:
ராஜஸ்தான்-பெங்களூரு
நேரம்: மாலை 3.30
இடம்: ஜெய்ப்பூா்.
சென்னை-கொல்கத்தா
நேரம்: இரவு 7.30
இடம்: சென்னை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.