படம்: ட்விட்டர் | குஜராத் டைட்டன்ஸ் 
செய்திகள்

நீல இளஞ்சிவப்பு நிற ஜெர்ஸியில் குஜராத் அணி: காரணம் என்ன தெரியுமா? 

இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி நீல இளஞ்சிவப்பு நிற ஜெர்ஸியில் விளையாட உள்ளது. 

DIN

கடந்தாண்டு ஐபிஎல்-இல் புதிய அணியாக உதயமாகியது குஜராத் டைட்டன்ஸ் அணி. ஹர்திக் பாண்டியா தலைமையில் தனது முதல் ஐபிஎல் தொடரிலேயே கோப்பையையும் வென்று அசத்தியது. தற்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பதும் இந்த அணிதான். 

இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் குஜராத் மோதுகிறது. இந்தப் போட்டியில் குஜராத் அணி லாவண்டர் (நீல இளஞ்சிவப்பு) நிற ஜெர்ஸியில் விளையாட உள்ளது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுதத இவ்வாறு விளையாட உள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ஆர்சிபி சில போட்டிகளில் சுற்று சூழலை பாதுகாக்க வலியிறுத்தி பச்சை நிற ஜெர்சியில் விளையாடும். அதனை தொடர்ந்து குஜராத் அணியும் இப்படி நல்ல விஷயத்திற்காக விளையாடுவது பாராட்டுக்குரியதென கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இன்று மாலை 7.30 மணிக்கு குஜராத் மண்ணில் 9வது இடத்தில் இருக்கும் ஹைத்ராபாத் அணியுடன் ஹார்திக் பாண்டியா அணி மோதுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

வழிகாட்டுதல் அறிக்கை

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

SCROLL FOR NEXT