செய்திகள்

கொல்கத்தாவுக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னௌ!

கொல்கத்தாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த லக்னௌ 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது. 

DIN

கொல்கத்தாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த லக்னௌ 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது. 

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் லக்னௌ மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, லக்னௌ முதலில் பேட் செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கரண் சர்மா மற்றும் டி-காக் களமிறங்கினர். கரண் சர்மா 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் டி-காக்குடன் மன்கத் ஜோடி சேர்ந்தர். இந்த ஜோடி நிதனமாக விளையாடியது. இருப்பினும், டி-காக் 28 ரன்களிலும், மன்கத் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மார்கஸ் ஸ்டொய்னிஷ் 0 ரன்னிலும், கேப்டன் க்ருணால் பாண்டியா 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால், லக்னௌ அணி 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின், நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயுஷ் பதோனி ஜோடி சேர்ந்தனர். ஒரு புறம் ஆயுஷ் பதோனி நிதானமாக விளையாட நிக்கோலஸ் பூரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 30 பந்துகளில் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஆயுஷ் பதோனி 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் லக்னௌ 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. கொல்கத்தா சார்பில் வைபவ் அரோரா, ஷர்துல் தாக்குர் மற்றும் சுனில் நரைன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஹர்சித் ராணா மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்குகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT