கோப்புப் படம் 
செய்திகள்

ஐபிஎல் 2023: பரிசுத் தொகை விவரம் - சிஎஸ்கேவிற்கு எவ்வளவு கிடைக்கும்?  

ஐபிஎல் 2023இன் பரிசுத் தொகையின்படி முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 கோடி வழங்கப்படும். 

DIN

2008 முதல் வருடம் ஒருமுறை ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. உலகிலேயே மிகவும் முக்கியமான தொடராகவும் முன்னேறிவருகிறது. மேலும் மற்றைய கிரிக்கெட் தொடர்களை விடவும் அதிகப் பரிசுத் தொகையை அளிப்பதாகவும் ஐபிஎல் வளர்ந்துள்ளது. 

முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 13 கோடியும் வழங்கப்படும். 3வது (மும்பை) 4வது (லக்னௌ) அணிக்கு முறையே ரூ. 7 கோடி, 6.5 கோடி ரூபாயும் வழங்கப்படுகிறது. மொத்தம் ரூ.46.50 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில் இதை விடவும் அதிகப் பரிசுத் தொகை வழங்கலாம் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2008 இல் பரிசுத்தொகை முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.4.8 கோடியும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.2.4 கோடியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதுமட்டுமின்றி அதிக ரன்கள் அடித்தவர்களுக்கு (ஆரஞ்சு கேப்), அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்கு (பர்பிள் கேப்) தலா 15 இலட்சமும், வளர்ந்துவரும் வீரர் விருதிற்கு ரூ.20 இலட்சமும் வழங்கப்படுகிறது. மதிப்புமிக்க வீரர் விருது- ரூ. 12 இலட்சம், சூப்பர் ஸ்டிரைக்கர் விருது - ரூ.15 இலட்சம், கேம் சேஞ்சர் விருது -ரூ. 12 இலட்சம் வழங்கப்பட உள்ளது. 

நாளை (மே.28) நடைபெறும் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணியுடன் குஜராத் அணி மோத உள்ளது. சிஎஸ்கே அணி வென்றால் ரூ.20 கோடி கிடைக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT