செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள நாங்கள் தயார்: தென்னாப்பிரிக்க வீரர்

இந்தியாவுக்கு எதிரான சவாலை சமாளிக்கத் தயாராக உள்ளோம் என தென்னாப்பிரிக்க வீரர் ராஸி வாண்டர் துசென் தெரிவித்துள்ளார்.

DIN

இந்தியாவுக்கு எதிரான சவாலை சமாளிக்கத் தயாராக உள்ளோம் என தென்னாப்பிரிக்க வீரர் ராஸி வாண்டர் துசென் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்த உலகக் கோப்பையில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி அசைக்க முடியாத அணியாக உள்ளது. இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் அசைக்க முடியாத அணிகளாகத் திகழும் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையான போட்டி வருகிற நவம்பர் 5-ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான சவாலை சமாளிக்கத் தயாராக உள்ளோம் என தென்னாப்பிரிக்க வீரர் ராஸி வாண்டர் துசென் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவில் விளையாடுவது மிகப் பெரிய தருணம். இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகின்றனர். அவர்களது அணிக்கு அதிக அனுபவம் இருக்கிறது. பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்துத் துறைகளிலும் இந்திய அணி சிறப்பாக செயல்படுகிறது. நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். அதனை இந்திய அணிக்கு எதிராகவும் வெளிப்படுத்தினால் நாங்கள் மிகவும் வலிமையான அணியாக இருப்போம். இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக விளையாடி அவர்களை வீழ்த்தியிருக்கிறோம். இந்தியாவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்  என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT