செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு ஹாட்ரிக் வெற்றி; நெதர்லாந்தை வீழ்த்தி அபாரம்!

நெதர்லாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

DIN

நெதர்லாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

உலகக் கோப்பையில் லக்னௌவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நெதர்லாந்து ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 3 விக்கெட்டுகளையும், நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ரஹீம் ஸத்ரன்  களமிறங்கினர். குர்பாஸ் 10 ரன்களிலும், இப்ரஹீம் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் ரஹ்மத் ஷா மற்றும் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. ரஹ்மத் ஷா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். கேப்டன் ஹஸ்மதுல்லா மற்றும் அஸ்மதுல்லா ஓமர்சாய் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். சிறப்பாக விளையாடிய கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி 56 ரன்களும் (6 பவுண்டரிகள்), அஸ்மதுல்லா ஓமர்சாய் 31 ரன்களும் (3 பவுண்டரிகள்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தனர். 

ஆப்கானிஸ்தான் 31.3 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை  வீழ்த்தியது. இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு இது  ஹாட்ரிக் வெற்றியாகும். 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் கடந்த இரண்டு போட்டிகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவால்னிக்கு சிறையில் விஷம்: மனைவி குற்றச்சாட்டு

உத்தரகண்டில் மழை, வெள்ளம்: 2,500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது - தோ்தல் அதிகாரிகள் தகவல்

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

அலைகடலுக்கு அப்பால்...

SCROLL FOR NEXT