செய்திகள்

உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி முகமது ஷமி சாதனை!

DIN

உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற சாதனையை இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி படைத்துள்ளார்.

உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (நவம்பர் 2) நடைபெற்ற போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதல் அணியாக அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி 55 ரன்களுக்கு சுருண்டது. 

இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளரான முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது சிராஜ் 3  விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் 5 ஓவர்கள் வீசிய முகமது ஷமி வெறும் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த உலகக் கோப்பையில் முகமது ஷமி 2-வது முறையாக 5  விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறார். உலகக் கோப்பையில்  அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையும் முகமது ஷமி படைத்தார். உலகக் கோப்பை போட்டிகளில் முகமது ஷமி இதுவரை 45 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்கள்

முகமது ஷமி - 45 விக்கெட்டுகள்
ஜாகிர் கான் - 44 விக்கெட்டுகள்
ஜவஹல் ஸ்ரீநாத் - 44 விக்கெட்டுகள்
ஜஸ்பிரித் பும்ரா - 33  விக்கெட்டுகள்
அனில் கும்ப்ளே -31 விக்கெட்டுகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீராமண்டி’ வெற்றிக் கொண்டாட்டம்!

சிரிக்கும் நபர்கள் எப்போதும் கண்ணுக்கு விருந்தானவர்கள்!

ஃபெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்!

சபரிமலை சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 3 வயது குழந்தை உயிரிழப்பு!

ஸ்லோவாகியா பிரதமர் நிலை கவலைக்கிடம்: ஐரோப்பிய தேர்தலில் அதிர்வு ஏற்படுத்துமா?

SCROLL FOR NEXT