செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!

உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.

DIN

உலகக் கோப்பையில் அகமதாபாத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலியா  முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். இந்த இணை நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. ஹெட் 11 ரன்களிலும், வார்னர் 15 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷேன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணிக்கு ரன்களை சேர்த்தது. இருப்பினும், ஸ்டீவ் ஸ்மித் 44  ரன்களில் அடில் ரஷீத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜோஷ் இங்லிஷ் 3 ரன்களில் ஆட்டமிழக்க, கேமரூன் கிரீன் மற்றும் லபுஷேன் ஜோடி சேர்ந்தனர்.

இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடியது. டேவிட் வில்லே இந்த  பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். அவர் கேமரூன் கிரீனை 47 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் மார்கஸ் ஸ்டொய்னிஸ் (35 ரன்கள்), பாட் கம்மின்ஸ் (10 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய லபுஷேன் 83 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். 

இறுதியில் 49.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி  286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளைக்  கைப்பற்றினார். மார்க் வுட் மற்றும் அடில் ரஷீத் தலா 2 விக்கெட்டுகளையும், டேவிட் வில்லே மற்றும் லியம் லிவிங்ஸ்டன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து களமிறங்கியது. அணியின் துவக்க ஆட்டக்காரரான ஜானி பார்ஸ்டோ ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, இறங்கிய ஜோ ரூட்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க டேவிட் மலான் மற்றும் பென் ஸ்டோக்ஸ் நிதானமான ஆட்டத்தை ஆடினர். பின், மலான் 50 ரன்களிலும் ஸ்டோக்ஸ் 64 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களின் விக்கெட்களைக் கைப்பற்றியவுடன் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை அடைந்தனர். 

இறுதியில் 48.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 253 ரன்களை மட்டுமே எடுத்தனர். இதனால் 33 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் அரையுறுதி செல்லும் வாய்ப்பையும் ஆஸி. உறுதிசெய்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT