படம்: எக்ஸ் | ஹார்திக் பாண்டியா 
செய்திகள்

உலகக் கோப்பை தொடரிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகல்! 

இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். 

DIN

உலகக் கோப்பையின் இந்தியா - வங்கதேச போடியின்போது பந்தினை தடுத்தபோது கணுக்காலில் அடிபட்டதால் ஹார்திக் பாண்டியா ஆடுகளத்தை விட்டு வெளியேறி அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் ஃபீல்டிங்குக்கு வந்தார். 

இந்திய  அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் சோகமான செய்தி ரசிகர்களை வந்தடைந்துள்ளது. 

காயம் குணமாக அதிக நாள்கள் ஆகுமென்பதால் உலகக் கோப்பை தொடரிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா இந்திய அணியில் இல்லாதது மிகப்பெரிய இழப்பென பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

SCROLL FOR NEXT