செய்திகள்

உலகின் தலைசிறந்த வீரர் விராட் கோலி; ரிக்கி பாண்டிங் புகழாரம்!

DIN

விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர் எனவும்,  சச்சின் சாதனையை  சமன் செய்துதான் அவர் சிறந்த வீரர் என நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை சமன் செய்தார். ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய சச்சினின் சாதனையை அவர் சமன் செய்தார். நேற்றையப் போட்டியில் ஒருநாள் போட்டிகளில் தனது 49-வது சதத்தை நிறைவு செய்தார். இந்த சாதனையை விராட் கோலி அவரது பிறந்த நாளில் படைத்திருப்பது மேலும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. 

இந்த நிலையில், விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர் எனவும்,  சச்சின் சாதனையை  சமன் செய்துதான் அவர் சிறந்த வீரர் என நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி தலைசிறந்த வீரர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதனை நான் நீண்ட நாள்களாக கூறி வருகிறேன். அவர் சச்சினின் சாதனையை சமன்செய்தோ அல்லது அதனை முறியடித்தோதான் அவர் சிறந்த வீரர் என நிரூபிக்க வேண்டுமென்பதில்லை. அவர் பேட்டிங்கில் செய்துள்ள மொத்த சாதனைகளே அவர் மிகச் சிறந்த வீரர் என்பதற்கு சான்று. அவரது சாதனைகள் நம்பமுடியாதவையாக இருக்கும். சச்சினின் 49 சர்வதேச ஒருநாள் போட்டி சதங்களை சமன் செய்ய வேண்டும் என்பது இத்தனை நாள்கள் அவரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட இலக்காக இருந்தது. அந்த இலக்கு உலகக் கோப்பையில் அவரது பிறந்த நாளில் நிறைவேறியுள்ளது. நேற்றைய நாள் விராட் கோலிக்கு மிகவும் சிறந்த நாளாக அமைந்துவிட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT