செய்திகள்

71வது அரைசதம்: முதலிடம் பிடித்த விராட் கோலி! 

இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 71வது அரைசத்தினை நிறைவு செய்து ஆட்டமிழந்தார். 

DIN

இந்தியாவின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராட் கோலி 290 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13,677 ரன்களை எடுத்துள்ளார். 35 வயதான கோலி சச்சினின் 49 சதத்தினை சமீபத்தில் சமன் செய்து அசத்தினார். 

இந்நிலையில் உலகக் கோப்பை லீக் போட்டியின் கடைசி போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கினை தேர்வு செய்தது. 

இந்தப் போட்டியில் தனது 71வது அரைசத்தினை நிறைவு செய்து ஆட்டமிழந்தார் விராட் கோலி. 51 ரன்கள் எடுத்திருந்த வேளையில் வான் டெர் மெட் ஓவரில் ஆட்டமிழந்தார்.

இந்த உலகக் கோப்பை தொடரின் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் தென்னப்பிரிக்காவின் டி காக்கினை (591) பின்னுக்குத்தள்ளி 594 ரன்களுடன் முதலிடம் பிடித்துள்ளார் விராட் கோலி.  

மீதமிருக்கும் அரையிறுதிப் போட்டியில் வென்றால் இறுதிப்போட்டியிலும் சிறப்பாக விளையாடினால் ஒரே உலகக் கோப்பை தொடரில் சச்சின் எடுத்த அதிகபட்ச ரன்களை (673) கோலியினால் எளிதில் அடைய முடியும். இந்தச் சாதனையை கோலி படைப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு துறைகள் ஒதுக்கீடு!

SCROLL FOR NEXT