செய்திகள்

ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன்செய்யுமா இந்தியா? 

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன்செய்ய இந்தியாவுக்கு வாய்ப்பிருக்கிறது. 

DIN

உலகக் கோப்பை போட்டியில் 45 லீக் ஆட்டங்கள் முடிவுற்று தற்போது நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது. மும்பையில் வரும் 15-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா-நியூஸி அணிகள் மோதுகின்றன. 16-ஆம் தேதி (வியாழக்கிழமை) ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன.

இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி 9 போட்டிகளிலும் வென்று அசத்திவருகிறது. ஒரு உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து அதிக வெற்றிகளை பெற்ற அணியாக ஆஸ்திரேலியா இருந்து வருகிறது. அதாவது 2003,2007ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து 11 வெற்றிகளை பெற்று சாதனைப் படைத்துள்ளது. 

இந்தியா அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் வென்றால் ஆஸி.யின் இந்த இமாலய சாதனையை சமன்செய்ய வாய்ப்பிருக்கிறது. 

கடந்த 2019 அரையிறுதியில் நியூஸிலாந்திடம் தோற்று இறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா. அதற்கு பழிதீா்க்கும் வகையில் தற்போதைய அரையிறுதியில் இந்தியா சிறப்பாக ஆடி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT