2-வது அரையிறுதி: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்!
உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பை ஒருநாள் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே மைதானத்தில் மழை பெய்ததாலும், போட்டியின் நடுவே மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதாலும், டாஸ் வெல்லும் அணிக்கு போட்டி சாதகமாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
இந்நிலையில், அரையிறுதியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
இதையும் படிக்க | அபார பந்துவீச்சு: ஷமிக்கு முத்தமளித்த அஸ்வின்!
இந்தப் போட்டியில் வெல்லும் அணி, ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.
இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ள அணியை காண இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.