செய்திகள்

இறுதிப் போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பௌலிங் தேர்வு! 

உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.   

DIN

கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும், 2 முறை சாம்பியனான இந்தியாவும் மோதும் இந்த இறுதி ஆட்டம் உலக கிரிக்கெட் ரசிகா்களுக்கு விருந்தளிக்கப் போகிறது.

ஏற்கெனவே இதே உலகக் கோப்பை போட்டியில் 2003-ஆம் ஆண்டு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியனானது.

தற்போது மீண்டும் இதே கட்டத்தில் இரு அணிகளும் சந்திக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் திறனுடன் இந்தியா இருக்கிறது என்றால், அது மிகையாகாது. நடப்பாண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆஸ்திரேலியாவிடம் இழந்ததற்கும் பதில் தருவதாக இருக்கும். 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.  பாட் கம்மின்ஸ், “ஈரப்பதம் வரும் என நினைக்கிறேன் அதனால் பந்து வீச்சினை தேர்வு செய்கிறேன்” எனக் கூறினார். 

இந்திய அணியில் மாற்றங்கள்: மாற்றங்கள் இல்லை. 

ஆஸ்திரேலிய அணியில் மாற்றங்கள்: மாற்றங்கள் இல்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

SCROLL FOR NEXT