செய்திகள்

ரசிகர்களால் ஷகிப் அல் ஹசன் தாக்கப்பட்டாரா?

உலகக் கோப்பைத் தொடரில் தோல்வியடைந்த வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் ரசிகர்களால் தாக்கப்படுவது போல் வெளியான விடியோ போலி எனத் தகவல்.

DIN

உலகக் கோப்பை லீக் ஆட்டங்களில் விளையாடிய வங்கதேச அணி 9 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று  7 ஆட்டங்களில் தோல்வியடைந்தது. மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை வங்கதேச ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன், ஆஞ்சலோ மாத்யூஸ் தாமதாக மைதானத்திற்குள் வந்ததாக் கூறி அவரை அவுட் ஆக்கினார்.

இது கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் ஏமாற்றத்தை அளித்ததுடன் ஷகிப் விமர்சிக்கப்பட்டார். 

இந்நிலையில், உலகக் கோப்பைத் தொடரில் இருந்து காயம் காரணமாக வெளியேறிய ஷகிப் அல் ஹசனை, வங்கதேசத்தில் வைத்து ரசிகர்கள் தாக்குவது போன்ற விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஆனால், இந்த விடியோ கடந்த மார்ச் மாதம் ஷகிப் துபை சென்றபோது எடுக்கப்பட்டது என சிலர் கூறி வருகின்றனர்.

நடந்து முடிந்த 2023 உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT