கெளதம் கம்பீர் 
செய்திகள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆலோசகராக கம்பீர் நியமனம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக கெளதம் கம்பீர் புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக கெளதம் கம்பீர் புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக விளையாடிய கெளதம் கம்பீர், கடந்த 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் கோப்பையைப் பெற்றுத் தந்தார்.

பின்னர், கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் புதிதாக இணைந்த லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார்.

லக்னெள அணியுடனான ஒப்பந்தம் இன்றுடன் நிறைவடைவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒத்துழைப்பு அளித்த அணி நிர்வாகம், பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களுக்கு தனது சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்து கம்பீர் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக கம்பீர் மீண்டும் இணைந்துள்ளதாகவும், தலைமைப் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்டுடன் கைகோர்த்துள்ளதாகவும் அந்த அணியின் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2011 முதல் 2017 வரை கொல்கத்தா அணியில் கம்பீர் விளையாடியுள்ளார். இதில், 5 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய கொல்கத்தா அணி, 2 முறை கோப்பையை வென்றது.

2017-ஆம் ஆண்டுக்கு பிறகு தில்லி கேபிடல்ஸ் அணிக்காக சிறிது காலம் கம்பீர் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

SCROLL FOR NEXT