செய்திகள்

ஐபிஎல் 2024: பென் ஸ்டோக்ஸ் இல்லை; சிஎஸ்கேவுக்குப் பின்னடைவா?

வேலைப்பளு மேலாண்மை காரணமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

வேலைப்பளு மேலாண்மை காரணமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முற்பகுதியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்தார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் இடம்பெற்ற போதிலும், அவரது முழங்கால் காயம் காரணமாக வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். 

இந்த நிலையில், வேலைப்பளு மேலாண்மை காரணமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அணி நிர்வாகம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனும் ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் தனது வேலைப்பளு மற்றும் உடல்தகுதி மேலாண்மை போன்ற காரணங்களுக்காக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இடம்பெறமாட்டார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஜூன் மாதத்தில் டி20 உலகக் கோப்பையிலும் தனது வேலைப்பளுவை நிர்வகிப்பதற்காக அவர் எடுத்துள்ள இந்த முடிவுக்கு அணி நிர்வாகம் ஆதரவளிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பென் ஸ்டோக்ஸ் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் ஆவார் . பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலமெடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆன்லைன் கிரிக்கெட் டிக்கெட் விற்பனை மோசடி! இளைஞர்களே இலக்கு!!

ஒடிசாவில் பாஜக நிர்வாகி சுட்டுக்கொலை!

லோகா சாப்டர் 1! ஓடிடியில் எங்கே? எப்போது?

போலி தொழில்நுட்ப சேவை மோசடி: 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ஏர் இந்தியா விபத்தை சித்திரித்து துர்கா பூஜைக்கு வைக்கப்பட்ட அலங்கார பந்தலால் சர்ச்சை!

SCROLL FOR NEXT