செய்திகள்

சர்வதேசப் போட்டிகளில் ஓய்வு முடிவை அறிவித்த பாகிஸ்தான் ஆல்ரவுண்டர்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் இமாத் வாசிம்  அறிவித்துள்ளார்.

DIN

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் அறிவித்துள்ளார்.

இமாத் வாசிம் பாகிஸ்தான் அணியில்  கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுக வீரராக களமிறங்கினார். ஜிம்பாப்வேக்கு எதிராக லாகூரில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியே பாகிஸ்தான் அணிக்காக அவர் விளையாடிய முதல் போட்டியாகும். இதுவரை அவர் பாகிஸ்தான் அணிக்காக 121 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வந்த அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக  எக்ஸ் வலைத்தளப் பதிவில்  அவர் பதிவிட்டிருப்பதாவது: கடந்த சில நாட்களாக எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை குறித்து அதிகமாக சிந்தித்து வந்தேன். சர்வதேச கிரிக்கெட்டில்  ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு இதுவே சரியான தருணம் என்ற முடிவுக்கு வந்தேன். இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். பாகிஸ்தான் அணிக்காக இத்தனை ஆண்டுகள் விளையாடும் வாய்ப்பு கிடைத்ததை எனக்கு கிடைத்த கௌரவமாக கருதுகிறேன். எனக்கு ஆதரவளித்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு எனது நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.

இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இமாத் வாசிம்  986 ரன்கள் மற்றும் 44 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 66 டி20 போட்டிகளில் விளையாடி 486 ரன்கள் மற்றும் 65 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்த ஆண்டு ஏப்ரலில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய டி20 போட்டியே பாகிஸ்தான் அணிக்காக அவர் விளையாடிய கடைசிப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலர் கைது

சிரிக்கும் தும்பைப் பூ... கேப்ரியல்லா!

இது புதுசு! உணவு ஆர்டர் செய்யும் செயலிகளிலும் மோசடியா? எச்சரிக்கை!

தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

SCROLL FOR NEXT