செய்திகள்

கார் விபத்தில் சிக்கியவரை மீட்க உதவிய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி

உத்தரகண்டில் கார் விபத்தில் சிக்கியவரை அந்த வழியாக சென்ற நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி மீட்க உதவியுள்ளார். 

DIN

உத்தரகண்டில் கார் விபத்தில் சிக்கியவரை அந்த வழியாக சென்ற நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி மீட்க உதவியுள்ளார். 

உத்தரகண்ட் மாநிலம், நைனிடால் அருகே மலைப்பாதையில் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி காரில் சென்றிருக்கிறார். அப்போது அவரது காருக்கு முன்னே சென்ற கார் ஒன்று திடீரென சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. 

காரில் பயணித்தவரை உடனடியாக முகமது ஷமியும், வேறு சிலரும் பாதுகாப்பாக வெளியே கொண்டுவந்து மீட்க உதவியுள்ளனர். மேலும் இதுதொடர்பான விடியோவை முகமது ஷமி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 

அதில், “விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்றியதில் மகிழ்ச்சி. அந்த நபர் மிகவும் அதிர்ஷ்டசாலி. கடவுள் அவருக்கு இரண்டாவது பிறப்பை கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT