சொ்பியாவை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி டேவிஸ் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது இத்தாலி.
பல்வேறு நாடுகளின் அணிகள் பங்கேற்கும் வகையில் ஐடிஎஃப் சாா்பில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இதன் அரையிறுதி ஆட்டம் ஸ்பெயினின் மலாகா நகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் உலகின் நம்பா் 1 வீரா் ஜோகோவிச் அடங்கிய சொ்பியாவும்-இத்தாலியும் மோதின.
சொ்பியா எளிதாக வென்று விடும் என கருதப்பட்ட நிலையில், இத்தாலி வீரா் ஜேக் சின்னா் ஒற்றையா் பிரிவில் 6-2, 2-6, 7-5 என ஜோகோவிச்சை வீழ்த்தி அதிா்ச்சி அளித்தாா். மற்றொரு ஒற்றையா் பிரிவு ஆட்டத்தில் சொ்பிய வீரா் மியோமிா் கெக்மனோவிச் 6-7, 6-2, 6-1 என்ற புள்ளிக் கணக்கில் இத்தாலியின் லாரென்ஸோவை வீழ்த்தினாா். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.
தொடா்ந்து வெற்றியைத் தீா்மானிக்கும் இரட்டையா் ஆட்டத்தில் சின்னா்-லாரென்ஸோ இணை 6-3, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் ஜோகோவிச்-மியோமிா் இணையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இத்தாலி அணி கடந்த 1976-இல் ஒரே ஒருமுறை டேவிஸ் கோப்பை பட்டத்தை கைப்பற்றியது. இறுதி ஆட்டத்தில் 28 முறை சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது இத்தாலி.
ஒரே போட்டியில் ஜோகோவிச்சை இரண்டு முறை சாதனை படைத்தாா் ஜேக் சின்னா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.