ஷுப்மன் கில் 
செய்திகள்

குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் கில்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

DIN


குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியன் ப்ரீமியர் லீக் 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிச. 19-ஆம் தேதி துபையில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணிக்கு நிகழாண்டு ஏலத்துக்காக ரூ.100 கோடி உள்ளது. கடந்த ஆண்டு ரூ.95 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வீரருக்கும் இது மூன்றாவது மற்றும் இறுதி 3 ஆண்டுகள் ஒப்பந்தமாக அமையவுள்ளது.

இதற்கிடையே அணிகள் வீரா்களை தக்க வைக்கவும், விடுவிக்கவும் நவ. 26-ஆம் தேதி மாலை 5 மணி அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று மாலை அனைத்து ஐபிஎல் அணிகளும் தாங்கள் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர்.

குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக வாங்கியுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் செயல்படுவார் என்று அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Vijayக்கும் திமுகவுக்கு ரகசிய தொடர்பு?; திருமா | செய்திகள்: சில வரிகளில் | 02.10.25

அன்பிற்கினியாள் ✨🌸... ரஷ்மிகா!

மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல்!

துடரும் இயக்குநரின் புதிய படம் ஆபரேஷன் கம்போடியா!

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

SCROLL FOR NEXT