செய்திகள்

உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடாதது கவலையளித்தது: இஷான் கிஷன்

DIN

உலகக் கோப்பைத் தொடரில் பல போட்டிகளில் விளையாடாதது கவலையளித்தாலும், உலகக் கோப்பைத் தொடருக்குப் பின் தொடங்கவிருந்த டி20 தொடரில் கிடைக்கும் வாய்ப்புகளை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ளும் பசியுடன் காத்திருந்ததாக இந்திய அணியின் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி முடிவடைந்த பிறகு ஜியோ சினிமாவுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.

அதில் அவர் கூறியதாவது: நான் எனது வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளும் பசியுடன் இருந்ததாக நினைக்கிறேன். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சாம்பியன் போல விளையாடியது. நான் பல போட்டிகளில் விளையாடவில்லை. அதை நினைத்து சற்று கவலையாக இருந்தேன். அணி சிறப்பாக விளையாடும்போது நான் விளையாடாதது குறித்து பெரிய அளவில் கவலைப்பட முடியாது. சர்வதேசப் போட்டிகளில் நீங்கள் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறாமல் இருக்கும் தருணத்தில் உங்களது மனதை புத்துணர்ச்சியாக வைத்திருந்து வாய்ப்பு கிடைக்கும்போது சிறப்பான பங்களிப்பை வழங்குவது அவசியம். வாய்ப்பு கிடைக்கும்போது அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் தனது அடுத்தடுத்த தொடர்ச்சியான அரைசதங்களால் இந்திய அணியின் வெற்றிக்கு இஷான் கிஷன் முக்கியப் பங்காற்றினர்.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இஷான் கிஷன் இரண்டு போட்டிகளில் விளையாடி 47 ரன்கள் சேர்த்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் அறிவிப்பு?”: ரோகிணி திரையரங்க உரிமையாளருடன் நேர்காணல்

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

கற்பித்தலும் கற்றலும்

ஈரான் அதிபர் மறைவு: நாளை துக்கநாள் அனுசரிப்பு

உதகை மலர் கண்காட்சி: மே 26-ஆம் தேதி வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT