செய்திகள்

தாயகம் திரும்பும் ஆஸ்திரேலிய மூத்த வீரர்கள்; டி20 தொடரைத் தக்கவைக்குமா?

டிராவிஸ் ஹெட்டைத் தவிர உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற வீரர்கள் அனைவரும் தாயகம் திரும்புகின்றனர்.

DIN

டிராவிஸ் ஹெட்டைத் தவிர உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற வீரர்கள் அனைவரும் தாயகம் திரும்புகின்றனர்.

உலகக் கோப்பைத் தொடர் முடிவடைந்த பிறகு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்த டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நிலையில் 3-வது  டி20 போட்டி குவாஹாட்டியில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களம் காண்கிறது. தொடரை இழக்காமலிருக்க இன்றையப் போட்டியில் வெற்றிப் பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. 

உலகக் கோப்பைத் தொடர் முடிவடைந்தவுடன் ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் தாயகம் திரும்பிய நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஆடம் ஸாம்பா தாயகம் திரும்பியுள்ளனர். இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அவர்கள் இடம்பெறமாட்டார்கள். இந்தியாவுடனான மூன்றாவதுப் போட்டி முடிவடைந்த பிறகு ஆஸ்திரேலிய வீரர்களான கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஜோஷ் இங்லிஷ், சீன் அப்பாட் ஆகியோர் தாயகம் திரும்புகின்றனர். இந்தியாவுடான கடைசி 2 டி20 போட்டிகளில் உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற வீரர்களில் டிராவிஸ் ஹெட் மட்டுமே விளையாட உள்ளார். 

ஆஸ்திரேலியா அணி விவரம் (4வது டி20 போட்டிக்கு)

மேத்யூ வேட் (கேப்டன்), ஜேசன் பெஹரண்டிராஃப், டிம் டேவிட், பென் துவார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், கிறிஸ் கிரீன், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மோட், ஜோஸ் பிளிப், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், கேன் ரிச்சர்ட்சன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT