செய்திகள்

புதிய சாதனை! டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியா வெண்கலம்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது. 

DIN

ஆசிய விளையாட்டுப் போட்டியின் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது. 

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஸு நகரில் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 

இந்நிலையில், இன்றைய போட்டியில் இந்தியா ஸ்கேட்டிங்கில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது. 

தொடர்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் முதல்முறையாக இந்தியா பதக்கம் வென்றுள்ளது. 

இந்தியாவின் அய்ஹிகா முகர்ஜி மற்றும் சுதிர்தா முகர்ஜி இணை, கொரிய குடியரசு இணையை தோற்கடித்து வெண்கலம் வென்றுள்ளது. 

இந்தியா 56 பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிழலிலும் ஜொலிக்கற நிரந்தர ஒளி அவ... சான்யா மல்ஹோத்ரா!

53 கிலோ கோயில் நகைகள் ஸ்டேட் வங்கியில் முதலீடு!

டி20: தெ.ஆ. அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது நமீபியா..!

தீபாவளி வருகிறது! 70% சலுகையில் பட்டாசு என்ற விளம்பர மோசடி!

தீர்ப்பு எதிரொலி: முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT