விராட் கோலி 
செய்திகள்

தொந்தரவு செய்யாதீர்கள்: விராட் கோலி வேண்டுகோள்

உலகக் கோப்பை டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

DIN

உலகக் கோப்பை டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

உலகக் கோப்பை ஒரு நாள் தொடர் இந்தியாவில் நாளைமுதல் தொடங்கவுள்ளது. குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

சென்னையில் அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், இந்திய வீரர் விராட் கோலி வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், “உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகளை கேட்டு தயவுசெய்து என்னை நண்பர்கள் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வீட்டில் இருந்தே கண்டுகளியுங்கள்.” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பகிர்ந்து, “உங்களின் குறுஞ்செய்திக்கு பதில் வரவில்லை என்றால் என்னிடம் உதவி கேட்காதீர்கள்” என்று விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நள்ளிரவு 2 மணிக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்தால்.. மலிவாக இருக்கும் என்பது உண்மையா?

மகாராஷ்டிரத்தின் முதல் பெண் துணை முதல்வராகும் சுநேத்ரா பவாா்..! இன்று மாலை பதவியேற்பு!

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் தைப்பூச தேரோட்டம்!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் தேவி விருது பெறும் அருங்காட்சியக கலை நிபுணர் டெபோரா தியாகராஜன்!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் தேவி விருது பெறும் டாக்டர் சௌம்யா சுவாமிநாதன்

SCROLL FOR NEXT