செய்திகள்

உலகக் கோப்பையை வெல்லும் வரை இது மாறப் போவதில்லை: டெம்பா பவுமா

உலகக் கோப்பையை வெல்லும் வரை தென்னாப்பிரிக்க அணியின் மீதான உலகக் கோப்பையை வெல்வதற்கு அதிர்ஷ்டமிடல்லாத அணி என்ற பார்வை மாறாது என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.

DIN

உலகக் கோப்பையை வெல்லும் வரை தென்னாப்பிரிக்க அணியின் மீதான உலகக் கோப்பையை வெல்வதற்கு அதிர்ஷ்டமிடல்லாத அணி என்ற பார்வை மாறாது என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் உலகத் தரத்திலான வீரர்கள் இருந்தபோதிலும் அந்த அணியால் அரையிறுதிக்கு மேல் முன்னேற முடிந்ததில்லை. அதனால், அந்த அணிக்கு உலகக் கோப்பையை வெல்ல அதிர்ஷ்டமில்லாத அணி என்ற பெயரும் உண்டானது. 

இந்த நிலையில், உலகக் கோப்பையை வெல்லும் வரை தென்னாப்பிரிக்க அணியின் மீதான உலகக் கோப்பையை வெல்வதற்கு அதிர்ஷ்டமிடல்லாத அணி என்ற பார்வை மாறாது என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பையை வெல்ல தென்னாப்பிரிக்கா அதிர்ஷ்டமில்லாத அணி என ஓரிரு முறை நான் கூறியிருக்கிறேன். ஆனால், அணியிலிருந்து அதுபோன்று யாரும் கூறியதைக் கேட்டதில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு உலகக் கோப்பையை வெல்லும் அதிர்ஷ்டம் இல்லை என்பதை அணியில் சிலர் நம்புவதாகவும், சிலர் நம்பாததாகவும் நான் நினைக்கிறேன். அணியில் உள்ள வீரர்கள் எதை நம்புகிறார்கள் என்பது மிகவும் முக்கியம். ஏனென்றால், இந்த பிரச்னை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. தென்னாப்பிரிக்க அணியின் மீதான இந்தப் பார்வையை அணியில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன். அணியின் மீதான இந்தப் பார்வை உலகக் கோப்பையை வென்றால் மட்டுமே விலகும். அணியின் மீதான எதிர்பார்ப்பு, அழுத்தம் என்பதெல்லாம் எப்போதும் இருக்கப் போகிறது என்றார்.

உலகக் கோப்பைத் தொடரில் நாளை (அக்டோபர் 7) நடைபெறும் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி இலங்கையை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

SCROLL FOR NEXT