டேவிட் மலான் 
செய்திகள்

மலான் சதம்: வங்கதேசத்துக்கு 365 ரன்கள் இலக்கு

வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 364 ரன்கள் குவித்துள்ளது.

DIN

வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 364 ரன்கள் குவித்துள்ளது.

ஹிமாசல் மாநிலம் தர்மசாலாவில் நடைபெறும் உலகக் கோப்பையின் 7-வது போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான் ஜோடி அதிரடி துவக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்த நிலையில் பேர்ஸ்டோ 52 ரன்களின் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட், பேர்ஸ்டோவுடன் இணைந்து அதிரடியை தொடர்ந்தார். இங்கிலாந்து அணி 37 ஓவர்களில் 266 ரன்கள் குவித்த நிலையில் மலான் 140 ரன்கள்(107 பந்துகள்) எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து வந்த இங்கிலாந்து வீரர்கள் பட்லர் 20, ரூட் 82, ப்ரூக் 20, சாம் கரண் 11 என வரிசையாக ஆட்டமிழந்தனர்.

50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 364 ரன்களை இங்கிலாந்து அணி குவித்துள்ளது.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக மஹேதி ஹாசன் 4, ஷோரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

SCROLL FOR NEXT