உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஆப்கானிஸ்தான் வீரர்!
ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக முகமது நபி மாறியுள்ளார்.
ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக முகமது நபி மாறியுள்ளார்.
உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் முகமது நபி இந்த சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்த உலகக் கோப்பையில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது.
இதையும் படிக்க: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி மிகப் பெரிய பின்னடைவு: இங்கிலாந்து கேப்டன்
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் 6 ஓவர்கள் வீசிய ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி வெறும் 16 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம், ஆப்கானிஸ்தான் அணிக்காக 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்தார். இதுவரை அவர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் மொத்தமாக 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
முன்னதாக ஆப்கானிஸ்தான் வீரர் டாலட் ஸ்த்ரன் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார். இந்தப் பட்டியலில் 11 விக்கெட்டுகளுடன் ரஷித் கான் 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.