மைதானத்தின் மேற்கூரையிலிருந்து தூக்கி வீசப்பட்ட விளம்பரப் பதாகைகள்!
பலத்தக் காற்று வீசியதால் லக்னௌ மைதானத்தின் மேற்கூரையிலிருந்து விளம்பரப் பதாகைகள் தூக்கி வீசப்பட்டு ரசிகர்கள் மீது விழுந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
பலத்தக் காற்று வீசியதால் லக்னௌ மைதானத்தின் மேற்கூரையிலிருந்து விளம்பரப் பதாகைகள் தூக்கி வீசப்பட்டு ரசிகர்கள் மீது விழுந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
உலகக் கோப்பையில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தப் போட்டியின்போது இடையே மழை குறுக்கிட்டு ஆட்டம் நடைபெறுவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.
மழை நின்ற பிறகு பலத்தக் காற்று வீசியதால் மைதானத்தின் மேற்கூரையிலிருந்து விளம்பரப் பதாகைகள் ரசிகர்கள் அமர்ந்திருக்கும் இடத்தின் மீது விழுந்தன. இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. விளம்பரப் பலகைகள் விழுந்த இடங்களில் குறைந்த அளவில் ரசிகர்கள் அமர்ந்திருந்தனர். நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால், அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ரசிகர்கள் பாதுகாப்பாக அமரவும் அறிவுறுத்தப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.