கடந்த அக்.5ஆம் தேதி முதல் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. இதன் லீக் போட்டியில் 19வது போட்டியாக இலங்கை- நெதர்லாந்து அணிகள் மோதகின்றன. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் செய்து 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
21.2 ஓவரில் 91/6 என இருந்த நெதர்லாந்து பின்னர் 45.1 ஓவருக்கு 221/7 என திடமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. இலங்கை அணி தனது வெற்றி வாய்ப்பினை வீணடித்தது என வரணனையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிக்க: 20வது போட்டி: இங்கிலாந்து பௌலிங் தேர்வு!
7வது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்காக நெதர்லாந்து அணியின் இங்கில்பிரிச்ட் 70 ரன்களும் லோகன் வன் பீக் 59 ரன்களும் அடித்து இலங்கைக்கு சவாலான இலக்கை நிரணயித்துள்ளார்கள்.
இதையும் படிக்க: சம்பளம் போதும்; பட வெற்றிக்காக பரிசுகள் தேவையில்லை: நடிகர் விஜய்
இலங்கை அணி சார்பில் ரஜிதா, மதுஷனாகா தலா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். தீக்ஷனா 1 விக்கெட்டு எடுத்தார்.
இலங்கை அணி 3 போட்டிகளிலும் தோல்வியுற்று கடைசி இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியாலாவது முதல் வெற்றியை பெறுமா என இலங்கை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.