செய்திகள்

உலகக் கோப்பையில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அணிகள்!

உலகக் கோப்பையில் நேற்றைய ஆட்டத்தில் 229 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

DIN

உலகக் கோப்பையில் நேற்றைய ஆட்டத்தில் 229 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

உலகக் கோப்பையில்  மும்பை வான்கடே மைதானத்தில்  நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்தை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் மூன்றாவது தோல்வி இதுவாகும். கடந்த போட்டியில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா அணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. 

229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலம் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அணிகளின் பட்டியலில் இங்கிலாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

உலகக் கோப்பையில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அணிகள்

தோல்வியடைந்த அணி எதிரணி ரன்கள் வித்தியாசம் ஆண்டு
 மே.இ.தீவுகள் தென்னாப்பிரிக்கா 257 ரன்கள் 2015
 இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா 229 ரன்கள் 2023
 நியூசிலாந்து ஆஸ்திரேலியா 215 ரன்கள் 2007
வங்கதேசம் தென்னாப்பிரிக்கா 206 ரன்கள் 2011

அதிக ரன்கள்  வித்தியாசத்தில் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அடைந்த தோல்விகள்

 எதிரணி ரன்கள் வித்தியாசம் ஆண்டு
 தென்னாப்பிரிக்கா 229 ரன்கள் 2023
 ஆஸ்திரேலியா 221 ரன்கள் 2022
 இலங்கை 219 ரன்கள் 2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT