படம் | ட்விட்டர் (எக்ஸ்) 
செய்திகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பயிற்சியாளராகவும், உதவிப் பயிற்சியாளராகவும் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஷேன் பாண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பயிற்சியாளராகவும், உதவிப் பயிற்சியாளராகவும் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஷேன் பாண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் தனது பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் புதிதாக இந்த இரண்டு பொறுப்புகளிலும் நியமிக்கப்பட்டுள்ளார். ஷேன் பாண்ட் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைய உள்ளார். நியூசிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக வலம் வந்த ஷேன் பாண்ட் அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை செயல்பட்டார். அவர் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தபோது நியூசிலாந்து கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை சென்றது.

2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தார். 9 சீசன்களில் 4 சீசன்களில் மும்பை கோப்பையை  வெல்ல உறுதுணையாக இந்தார். தற்போது அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ஷேன் பாண்ட் இணைவது குறித்து அந்த அணியின் இயக்குநர் குமார் சங்ககாரா கூறியதாவது: நவீன கால கிரிக்கெட்டின் மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஷேன் பாண்டும் ஒருவர். அவருக்கு அதிக அளவிலான அனுபவம் உள்ளது. அந்த அனுபவத்தினால் தனது துறையில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT