செய்திகள்

அடில் ரஷித்: சர்வதேச போட்டிகளில் புதிய சாதனை! 

இங்கிலாந்து வீரர் அடில் ரஷித் சர்வதேச போட்டிகளில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

DIN

உலகக் கோப்பையில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்தியா விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்தது. 

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கிறிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ரஷித்  தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

250 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ரஷித் 350 (டெஸ்ட் 60 + ஒருநாள் 192 + டி20 98)  விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 15 முறை 4 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் இரு முறை 5 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 

ஒருநாள் போட்டிகளில் 5/27 என்பது சிறந்த பௌலிங்காக இருக்கிறது. இங்கிலாந்துக்காக 350 விக்கெட்டுகள் எடுத்த சுழல்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 3வது இடத்தினை பிடித்துள்ளார் ரஷித். இங்கிலாந்து பௌலர்களில் வேகம் மற்றும் ஸ்பின்னர் என அனைத்து வீரர்கள் பட்டியலில் 9வது இடத்தினையும் பிடித்துள்ளார். 

இங்கிலாந்து அணி 23.1 ஓவரில் 81/6 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவால்னிக்கு சிறையில் விஷம்: மனைவி குற்றச்சாட்டு

உத்தரகண்டில் மழை, வெள்ளம்: 2,500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது - தோ்தல் அதிகாரிகள் தகவல்

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

அலைகடலுக்கு அப்பால்...

SCROLL FOR NEXT