செய்திகள்

ஐசிசியின் கவனம் எங்கள் மீது திரும்ப வேண்டும்: நெதர்லாந்து வீரர்

ஐசிசியின் கவனம் நெதர்லாந்து அணியின் மீது திரும்ப வேண்டும் என நெதர்லாந்து அணியின் ஆல்ரவுண்டர் பாஸ் டி லீட் தெரிவித்துள்ளார்.

DIN

ஐசிசியின் கவனம் நெதர்லாந்து அணியின் மீது திரும்ப வேண்டும் என நெதர்லாந்து அணியின் ஆல்ரவுண்டர் பாஸ் டி லீட் தெரிவித்துள்ளார்.

இந்த உலகக் கோப்பைத் தொடரில்  இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள நெதர்லாந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சிறிய அணியான நெதர்லாந்து பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதன்பின், வங்கதேச அணியுடனான நேற்றைய ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. 

இந்த நிலையில், ஐசிசியின் கவனம் நெதர்லாந்து அணியின் மீது திரும்ப வேண்டும் என நெதர்லாந்து அணியின் ஆல்ரவுண்டர் பாஸ் டி லீட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் பெறும் ஒவ்வொரு வெற்றியும் எங்களுக்கு மிகப் பெரிய விஷயமாக இருக்கப் போகிறது. எங்களது ஒவ்வொரு வெற்றியும் நெதர்லாந்தில் கிரிக்கெட்டை ஊக்குவிக்க முக்கியமானதாக அமையும். மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்து எங்களுக்கான அரையிறுதி வாய்ப்பு குறித்துத் தெரியும். ஆனால், எங்களால் முடிந்த அளவுக்கு வெற்றி பெற வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்டுள்ளோம். ஐசிசியின் கவனம் எங்கள் மீது திரும்ப வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

தவெக சிறப்பு பொதுக்குழு தொடங்கியது! கரூரில் பலியானோருக்கு மெளன அஞ்சலி!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

SCROLL FOR NEXT