செய்திகள்

மறைந்த கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடியை நினைவுகூறும் இந்திய அணி!

மறைந்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடியின் நினைவாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து களமிறங்குகின்றனர்.

DIN

மறைந்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடியின் நினைவாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து களமிறங்குகின்றனர்.

உலகக் கோப்பையில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்கிறது. இந்தப் போட்டியில் மறைந்த பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடியினை நினைவுகூறும் விதமாக இந்திய வீரர்கள் அனைவரும் தங்களது  கைகளில் கருப்புப்பட்டை அணிந்து களமிறங்குகின்றனர்.

இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இன்றையப் போட்டியில்  மறைந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடியின் நினைவாக இந்திய வீரர்கள் அவர்களது கைகளில் கருப்புப் பட்டைகள் அணிந்து விளையாடுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்துவீச்சு ஜாம்பாவானுமான பிஷன் சிங் பேடி அண்மையில் உடல்நலக் குறைவு காரணாமாக காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்து திணறல் (79/7): பாகிஸ்தானின் முதல் வெற்றியைத் தட்டிப்பறிக்கும் மழை!

பழம்பெரும் பாடகி பாலசரஸ்வதி தேவி காலமானார்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 75 காசுகள் உயர்ந்து ரூ.88.06 ஆக நிறைவு!

கால்பந்து - கிரிக்கெட் சங்கமம்: லிவர்பூல் வீரரை மீன் குழம்புடன் வரவேற்கும் சஞ்சு சாம்சன்!

நோக்கு வர்மம்... கேதரின் தெரசா!

SCROLL FOR NEXT