செய்திகள்

பந்துவீச்சில் அசத்திய ஆப்கானிஸ்தான்; 241 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

DIN

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

உலகக் கோப்பையில் இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இலங்கை முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் திமுத் கருணாரத்னே களமிறங்கினர். திமுத் கருணாரத்னே 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் குசல் மெண்டிஸ் களமிறங்கினார். நிசங்கா மற்றும் கேப்டன் குசல் மெண்டிஸ் நிதானமாக விளையாடினர். நிசங்கா 46 ரன்களிலும்,  குசல் மெண்டிஸ் 39 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் சதீரா சமரவிக்கிரம (36 ரன்கள்), சரித் அசலங்கா (22 ரன்கள்), தனஞ்ஜெயா டி சில்வா (14 ரன்கள்), ஏஞ்சலோ மேத்யூஸ் (23 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். 

இறுதியில் இலங்கை அணி 49.3 ஓவர்களில் 241 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஃபசல்ஹக் ஃபரூக்கி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும், அஸ்மதுல்லா மற்றும் ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT