செய்திகள்

டைமண்ட் லீக் போட்டி : வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா!

டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். 

DIN

டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். 

சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில், நடப்பு ஆண்டுக்கான ஜூரிச் டையமண்ட் லீக் 2023 போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.

முதல் முயற்சியில் 80.79 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்தபோதும், அடுத்து 2 முறை தவறுதல் ஏற்பட்டது. 4-வது முயற்சியில் 85.22 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்த சோப்ரா, 5-வது முயற்சியில் 85.71 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்தார்.

0.15 மீட்டர் தூர வித்தியாசத்தில் முதலிடத்தை நீரஜ் சோப்ரா தவறவிட்டார். ஜாகுப் வால்டிச் 85.86 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்துது தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்றார். இதன்மூலம் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT