கோப்புப்படம் 
செய்திகள்

நீரஜ் சோப்ராவை பாராட்டிய ஸ்விட்சர்லாந்து சுற்றுலாத் துறை!

ஒலிம்பிக் மற்றும்  உலக சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ராவை அவரது சாதனைகளுக்காக ஸ்விட்சர்லாந்து நாட்டின் சுற்றுலாத் துறை பாராட்டியுள்ளது.

DIN

ஒலிம்பிக் மற்றும்  உலக சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ராவை அவரது சாதனைகளுக்காக ஸ்விட்சர்லாந்து நாட்டின் சுற்றுலாத் துறை பாராட்டியுள்ளது.

ஸ்விட்சர்லாந்து நாட்டின் நட்புறவு தூதராக ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா செயல்பட்டு வருகிறார். அவர் அண்மையில் ஹங்கேரியின்   புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார். இதன்மூலம், ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற மூன்றாவது ஈட்டி எறிதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 

இந்த நிலையில், ஒலிம்பிக் மற்றும்  உலக சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ராவை அவரது சாதனைகளுக்காக ஸ்விட்சர்லாந்து நாட்டின் சுற்றுலாத் துறை பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஸ்விட்சர்லாந்து சுற்றுலாத் துறை சார்பில் கூறியதாவது: இந்தியாவின் சிறந்த ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ராவை பாராட்டுவதில் நாங்கள் மிகுந்த பெருமையடைகிறோம். ஒட்டுமொத்த இளைய தலைமுறைக்கும் அவர் ஒரு சிறந்த உந்து சக்தியாக மாறியுள்ளார். அவர் ஸ்விட்சர்லாந்தின் நட்புறவு தூதராக இருப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவரது வெற்றிக்கு எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்காலத்தில் வரவிருக்கும் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறோம் என்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT