செய்திகள்

ஓராண்டுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் மீண்டும் பென் ஸ்டோக்ஸ்!

உலகக் கோப்பை தொடருக்காக ஒருநாள் போட்டிகளில் ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளார்.  

DIN

உலகக் கோப்பை தொடருக்காக ஒருநாள் போட்டிகளில் ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளார்.  

இங்கிலாந்து  அணியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு ஜூலையில் ஒருநாள் போட்டிகளில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அவர் தனது ஓய்வு முடிவை இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்வதற்காக அண்மையில் திரும்பப் பெற்றார். இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் இன்று களமிறங்கியுள்ளார்.

 நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முடிவடைந்த நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 

உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெறாத ஹாரி ப்ரூக் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இன்றையப் போட்டியில் மார்க் வுட் இடம்பெறவில்லை. இங்கிலாந்து அணிக்காக அறிமுக வீரராக கஸ் அட்கின்ஷன் களமிறங்குகிறார்.

ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவதற்கு முன்பு பென் ஸ்டோக்ஸ் கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

கடலோரக் கிராமங்களில் மணல் குவாரிகளை தடை செய்யக் கோரிக்கை

புனித ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றம்

நாளை ஒருங்கிணைந்த தொழில் நுட்ப கணினி வழித்தோ்வு

SCROLL FOR NEXT