செய்திகள்

வார்னர், லபுஷேன் சதம் விளாசல்: தென்னாப்பிரிக்காவுக்கு 393 ரன்கள் இலக்கு!

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லபுஷேனின் அசத்தலான சதங்களால் ஆஸ்திரேலிய அணி 8  விக்கெட்டுகள் இழப்புக்கு 392 ரன்கள் குவித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (செப்டம்பர் 9) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது.

ஆஸ்திரேலிய அணியில் தொடக்க  ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இந்த இணை ஆஸ்திரேலிய அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. ஆஸ்திரேலிய அணி 109 ரன்களில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 36 பந்துகளில் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் களமிறங்கிய கேப்டன் மிட்செல் மார்ஷ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பின்னர், வார்னர் மற்றும் லபுஷேன் ஜோடி சேர்ந்தனர். லபுஷேன் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினார். அவர் அவ்வப்போது பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய வண்ணமே இருந்தார். வார்னரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

வார்னர் 93 பந்துகளில் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின், லபுஷேனுடன் இணைந்தார் ஜோஸ் இங்லிஷ். ஜோஸ் இங்லிஷ் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். இதனால், ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 300-ஐக் கடந்து பயணித்தது. ஜோஸ் இங்லிஷ் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து தனது அறிமுகப் போட்டியில் களமிறங்கிய டிம் டேவிட் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய லபுஷேன் சதமடித்து அசத்தினார். அவர் 99 பந்துகளில் 124 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 19 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். 

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 392 ரன்கள் எடுத்தது. 

தென்னாப்பிரிக்கா தரப்பில் ஷம்சி 4 விக்கெட்டுகளைக்  கைப்பற்றி அசத்தினார். ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும், ஜேன்சன் மற்றும் பெஹ்லுக்வாயோ தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

393 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்குகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT