செய்திகள்

ஜவானை பாராட்டிய கிரிக்கெட் பிரபலங்கள்; நன்றி தெரிவித்த ஷாருக்கான்!

ஜவான் படத்தினைப் பார்த்து பாராட்டு தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு ஷாருக்கான் இன்று (செப்டம்பர் 10)  தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

DIN

ஜவான் படத்தினைப் பார்த்து பாராட்டு தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு ஷாருக்கான் இன்று (செப்டம்பர் 10)  தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை செய்து வருகிறது.  அனிருத் இசையமைத்த இப்படத்தில்  நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஜாவன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை  படைத்து வரும் நிலையில், ஜவான் படத்தினைப் பார்த்து பாராட்டு தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக், ரிங்கு சிங் மற்றும் யசஸ்வி ஜெய்ஷ்வால் ஆகியோருக்கு எக்ஸ் வலைதளப் பதிவின் மூலம் ஷாருக்கான் இன்று (செப்டம்பர் 10)  தனது நன்றியினை தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: உங்களது பாராட்டுகளுக்கு நன்றி. ஜவான் படம் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன் எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாய் குரைத்த விவகாரம்: உரிமையாளா் மீது தாக்குதல்

அரசு ஊழியா்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் நல்ல முடிவு: அமைச்சா் கே.கே.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

வெங்காய விலை குறைவால் விவசாயிகள் கவலை

பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு: எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT