செய்திகள்

அறிமுக வீரராக களமிறங்கும் திலக் வர்மா; இந்திய அணியில் முக்கிய வீரர்கள் பலருக்கு ஓய்வு!

ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்துக்கு எதிரான இன்றையப் போட்டியில் இந்திய வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

DIN

ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்துக்கு எதிரான இன்றையப் போட்டியில் இந்திய வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இன்று (செப்டம்பர் 15) இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து வங்கதேசம் முதலில் விளையாடி வருகிறது.

இன்றையப் போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி, ஹார்திக் பாண்டியா, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. திலக் வர்மா இன்று தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிறார். இன்றையப் போட்டிக்கான இந்திய அணியில் முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்குர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை.

இந்திய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட்டது. நேற்றையப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தியா - இலங்கை இடையேயான இறுதிப் போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 17) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள்களுக்குப் பிறகு பங்குச் சந்தை உயர்வுக்கான 3 காரணங்கள்?

10 நிமிடத்திற்கு ஒரு பெண், நெருங்கிய உறவினரால் கொல்லப்படுகிறார்! - ஐ.நா.

மெழுகு டாலு நீ... ஸ்ரேயா கோஷல்!

நவ.28ல் உடுப்பியில் பிரதமர் மோடி சாலைவலம்!

பளிங்கு சிலை... அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT