செய்திகள்

ரோஹித் சர்மா ஒரு போராளி: ஏபி டி வில்லியர்ஸ்

DIN

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு போராளி எனவும், அவர் எதற்கும் பின் வாங்கியதில்லை எனவும் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீதான தனது மரியாதையை வெளிப்படுத்திய அவர் இதனை தெரிவித்தார். இதனை அவரது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் பேசியதாவது: ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா மெதுவாக ஆரம்பித்தார். ஆனால், வேகமாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மெதுவாக 2 ஆயிரம் ரன்கள் குவித்த 4-வது வீரர் ரோஹித் சர்மா. ஆனால், வேகமாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 2-வது வீரர். அவர் சிறப்பாக விளையாடியிருக்கிறார். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் விளையாடுவதை முதல் முறையாக பார்த்தபோது அவரால் சிறப்பான ஆட்டத்தை வழங்க முடியும் என தெரிந்து கொண்டேன். அவரிடம் மிகவும் பிடித்தது என்னவென்றால், அவரது போராடும் குணம். அவர் எதற்காகவும் பின் வாங்கியதில்லை. விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, எம்.எஸ்.தோனி மற்றும் ராகுல் டிராவிட் அவர்களைத்  தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 6-வது இந்திய வீரர் ரோஹித் சர்மா.விராட் கோலிக்கு அடுத்தபடியாக வேகமாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'லக்கி பாஸ்கர்' படத்தின் முதல் பாடல் எப்போது?

உமாபதி ராமையா - ஐஸ்வர்யா அர்ஜுன் தம்பதி!

மேற்கு வங்க ரயில் விபத்து எதிரொலி: 19 ரயில்கள் ரத்து!

சென்னை மக்கள் கவனத்துக்கு.. மழை அறிவிப்பு!

மகாராஜா வசூல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

SCROLL FOR NEXT