செய்திகள்

இந்திய அணிக்காக தியாகம் செய்த தோனி: கம்பீர் புகழாரம்!

இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக கடைசி வரிசையில் களமிறங்கி மகேந்திர சிங் தோனி தியாகம் செய்துள்ளதாக முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக கடைசி வரிசையில் களமிறங்கி மகேந்திர சிங் தோனி தியாகம் செய்துள்ளதாக முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற கம்பீர், தோனியின் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்த நிகழ்வில் பேசிய கம்பீர், “ஒரு போட்டியின் திசையை மாற்றக்கூடிய திறமை பெற்றிருந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் தோனிதான். அவரை போன்ற பலம்வாய்ந்த ஒரு வீரர் பேட்டிங் வரிசையில் 7-வதாக பெற்றது இந்திய கிரிக்கெட் அணி பெற்ற வரம்.” எனத் தெரிவித்தார்.

மேலும், “தோனியின் தொடக்க காலங்களை போலவே அவர் பேட்டிங்கில் 3-வதாக களமிறங்கி இருந்தால், பல்வேறு ஒரு நாள் சாதனைகளை கண்டிபாக முறியடித்திருப்பார். பல சதங்களை அடித்திருப்பார். கேப்டன் பொறுப்பை ஏற்றதால் பேட்டிங் வரிசையில் 6, 7-வது இடத்தில் களமிறங்கி தனது பேட்டிங்கை தியாகம் செய்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெட்டல் இன்ஜெக்சன் மோல்டிங் துறையில் களமிறங்கும் டிஐ இந்தியா

125 நாள் வேலை உறுதித் திட்டம்: திமுக மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தீவிரமாகும் ஏஐ அச்சுறுத்தல்: உள்துறை உயரதிகாரிகளுக்கு நாடாளுமன்ற குழு அழைப்பாணை!

ஜப்பான், தாய்லாந்தில் இன்று தோ்தல்

1980 இல் வாக்காளா் பட்டியல் முறைகேடு குற்றச்சாட்டு - சோனியா காந்தி பதில் தாக்கல்

SCROLL FOR NEXT