செய்திகள்

முதலிடத்துக்கு போட்டியிடும் இந்தியா- ஆஸ்திரேலியா! 

உலகக் கோப்பைக்கு முன்னதாக ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துக்கு இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளிடையே கடுமையான போட்டியுள்ளது. 

DIN

உலகக் கோப்பைக்கு முன்னதாக ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துக்கு இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளிடையே கடுமையான போட்டியுள்ளது. 

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது. அதன் ரேட்டிங் 115 (114.889) ஆக உள்ளது. 2வது இடத்தில் இந்திய அணி இருக்கிரது. அதன் ரேட்டிங் 115 (114.659) ஆக உள்ளது. 

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்தியா அணி 0.23 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தை இழந்துள்ளது. இந்தப் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. அதன் ரேட்டிங் 113. 

உலகக் கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எந்த விதமான போட்டிகளுமில்லை. ஆனால் 2வது 3வது இருக்கிற இந்தியா, ஆஸி. அணிகளுக்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் உள்ளது முக்கியத்துவம் பெருகிறது. 

இந்தத் தொடரில் யார் வெற்றிப் பெருகிறார்களோ அவர்கள் உலகக் கோப்பைக்கு முன்னதாக ஐசிசி தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறுவார்கள். அநேகமாக அவர்கள்தான் உலகக் கோப்பையும் வெல்லுவார்கள் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். 

செப்.22ஆம் தேதி இந்தியா ஆஸி. அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. உலகக் கோப்பை போட்டிகள் அக்.5ஆம் தேதி நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT