படம்: ட்விட்டர் (எக்ஸ்) 
செய்திகள்

நடு இரவில் பேட்டிங் பயிற்சி செய்த அஸ்வின்! (விடியோ)

இந்திய கிரிக்கெட் வீரர் ரவி அஸ்வின் போட்டி முடிந்தப் பிறகு பேட்டிங் செய்யும் விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

DIN

ஐபிஎல் 2009இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதன்முதலாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இந்திய அணியில் ஒருநாள், டி20 போட்டிகளில் 2010இல் தேர்வானார். டெஸ்டில் 2011இல் களமிறங்கினார். 

சிஎஸ்கே அணியில் 6 ஆண்டுகள் இருந்த அஸ்வின் பல மறக்க முடியாத இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இந்திய அணியில் சிறந்த சுழல்பந்து வீச்சாளராக திகழ்கிறார். சிறந்த ஐசிசி பௌலர், ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிரண்டு இடங்களை பிடித்து அசத்தியுள்ளார். 

ஆஸி. எதிரான ஒருநாள் தொடரில் அஸ்வின் தேர்வாகி சிறப்பாக விளையாடினார். 10 ஓவர்கள் வீசி 47 ரன்களுக்கு ஒரு முக்கியமான(லபுஷேன்) விக்கெட்டினை வீழ்த்தினார். பும்ராவிற்குப் பிறகு குறைந்த ரன்களை வழங்கினார். 

281 ரன்கள் எடுத்து இந்திய அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. அஸ்வினுக்கு பேட்டிங் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

பௌலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக ஆட வேண்டுமென போட்டி முடிந்தப் பிறகும் அஸ்வின் பயிற்சி எடுத்து வருகிறார். ஆல்ரவுண்டாக உலகக் கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்புள்ளது. அக்‌ஷர் படேல் பேட்டிங் அசத்தினாலும் பௌலிங்கில் சோபிக்கவில்லை. அஸ்வின் பேட்டிங்கில் மெருகேறினால் நிச்சயமாக அவர்தான் தேர்வு செய்யப்படுவார். 

இதனால்தான் அஸ்வின் தீவிரமாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT