படம்: ட்விட்டர் (எக்ஸ்) 
செய்திகள்

ஆசியப் போட்டி: இறுதிச் சுற்றில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி! 

ஆசியப் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் வங்க தேச அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. 

DIN

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச மகளிரணி மோசமான தொடக்கத்தை அளித்தது. முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் இந்தியாவின் பூஜா வஸ்திராக்கர். அடுத்து ஆடிய வங்கதேச அணியின் வீராங்கனைகள் மீண்டும் சொதப்பவே 51 ரன்கள் மட்டுமே எடுத்து 10 விக்கெட்டுகளை இழந்தது. 

இந்திய அணி சார்பாக பூஜா வஸ்திராக்கர் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். தீப்தி சர்மாவை தவிர பந்து வீசிய மற்ற வீராங்கனைகள் தலா 1 விக்கெட்டினை எடுத்தார்கள். 

52 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிரணி 8.2 ஓவரில் 52/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷபாலி வர்மா 17 ரன்களும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 20 ரன்களும் ஸ்மிருதி மந்தனா 7 ரன்களும் எடுத்தனர். 

இதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது. அதனால் வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது. இறுதிப் போட்டியில் வென்றால் தங்கம் கிடைக்கும். 

ஏற்கனவே இந்திய அணி துடுப்பு படகு போட்டியின் ஆடவர் அணி பிரிவில் இந்தியாவின் பாபு லால் யாதவ், ராம் லே ஜோடி வெண்கலம் வென்றனர். துடுப்பு படகு போட்டியின் ஆடவர் 8 பேர் குழு பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு!

தண்ணீர் தொட்டியில் மூழ்கி காட்டு யானை பலி!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 40,500 கன அடியாக சரிவு!

6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

விவசாய கிணற்றில் விழுந்த காட்டு யானை பலி

SCROLL FOR NEXT